Advertisment

சர்ச்சையான கே.என்.நேருவின் 'அரட்டை' வீடியோ..!

ddd

சமீபத்தில் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் கே.என்.நேரு, தன்னுடைய அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் பேசிய காட்சிகள் செல்ஃபோனில் எடுக்கப்பட்டு, வைரலாக பரவி வருகிறது. அதில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக திமுக பிரமுகர் ஒருவர் நேருவிடம் கூறுகிறார். அதற்கு நேரு, “அவர்கள் கொடுத்தால் கொடுத்துவிட்டு போகட்டும். 500 ரூபாய் முழுமையாகச் சென்று வாக்காளர்களைச் சேராது. அதனால் 200 கொடு போதும்” என்கிறார். அதிமுக 500 கொடுப்பதால், நாமும் 500 கொடுப்போம் என நம்ம ஆளுங்க சொல்றாங்க என்று சொல்லும் தொண்டரை, கடுமையான வார்த்தைகளால் சாடுகிறார் கே.என்.நேரு.

Advertisment

ஏற்கனவே காவல்துறையினருக்கு தபால் ஓட்டுப் போட கவரில் பணம் கொடுத்த விவகாரத்தில் இவருடைய பெயர் அடிபட்டு, தற்போது அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அது ஓய்வதற்குள் மீண்டும் இப்படிபட்ட ஒரு வீடியோ வெளியாகி அது வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது.

Advertisment

தோ்தல் ஆணையம்,காவலா்களுக்குப் பணம் கொடுத்த வழக்கு விசாரணையில் இருக்கும்போது, கே.என்.நேரு பேசிய இந்த வீடியோ தற்போது அவா்களுக்கு கூடுதல் பலத்தைத் தந்ததுள்ளது. இதனால் டென்ஷன் ஆன கே.என்.நேரு, தொண்டா்கள் உடன் வருவதைப் பார்த்து, “இன்னும் என் பின்னாடியே ஏன் சுத்திக்கிட்டு இருக்கீங்க? திருவெறும்பூா், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் தோற்கடிப்பதற்கான வேலையைப் பாருங்க” என்று சொல்லி அனுப்பியுள்ளார்.

kn nehru trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe