திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள் திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

kn nehru anbil poyyamozhi

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் கே.என்.நேரு தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், திருச்சி வடக்கு - திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு - திருச்சி மத்திய - திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.

முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி வடக்கு மாவடடக் கழகச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

திருச்சி மேற்கு, திருவரங்கம், இலால்குடி ஆகிய ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக வைரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக அன்பில் மகேஷ்பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.