கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குப் பதிவு..! 

KN Nehru, Anbil Mahesh cast Vote

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக இன்று நடைபெற்றுவரும் நிலையில், காலை முதலே வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு கரோனா அடிப்படை பரிசோதனையானது செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

KN Nehru, Anbil Mahesh cast Vote

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதலாவதாக தங்களுடைய வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.நேரு, திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள மக்கள் மன்றத்திலும், திருச்சி எம்.பி.சிவா காலை வெஸ்ட்ரி பள்ளியிலும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி கிராப்பட்டியில் உள்ள லிட்டில் பிளவர் பள்ளியிலும் வாக்களிக்களித்தனர்.

kn nehru trichy
இதையும் படியுங்கள்
Subscribe