Advertisment

‘என்னைப் போன்ற உண்மையான நிர்வாகிகள் ஒடுக்கப்படுகிறார்கள்’ சோனியாவுக்கு குஷ்புவின் இராஜினாமா கடிதம்! 

Khushboo's resignation letter to Sonia gandhi

காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடித்தத்தில், ‘தேசிய செய்தித் தொடர்பாளராகவும் காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினராகவும் எனக்குப் பொறுப்பு வழங்கியதற்கு மிக்க நன்றி.

Advertisment

பல்வேறு சுழ்நிலைகளிலும், பல்வேறு தளங்களிலும்கட்சியைநான் அடையாளப்படுத்தியதை பெருமையாகக் கருதுகிறேன். 2014ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மோசமாக இருந்த நிலையில்தான், நான் கட்சிக்குள் வந்தேன். வந்ததற்கு காரணம் பணமோ அல்லது பிரபலமாகுவதற்கோ அல்ல. கட்சிக்காக உழைக்கவே காங்கிரஸில் சேர்ந்தேன்.

Advertisment

கள நிலவரத்தை அறியாதவர்களும் மக்களுடன் தொடர்பில் இல்லாத மூத்த நிர்வாகிகளின் வழிக்காட்டுதலையும் என்னைப் போன்ற கட்சிக்காக உழைக்கக் கூடியவர்கள் பின்பற்ற வேண்டியதாக இருக்கிறது. இதன் மூலம் என்னைப்போன்ற உண்மையான நிர்வாகிகள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மிக நீண்ட சிந்தனைக்குப் பிறகே கட்சியிலிருந்து விலகும் முடிவை நான் எடுத்துள்ளேன். இந்தத் தருணத்தில் ராகுல் காந்திக்கும் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

congress kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe