Advertisment

நமீதாவை புறக்கணித்த குஷ்பு ! 

Khushboo ignores Namitha

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் நடிகை குஷ்பு. தினமும் நடந்து நடந்து வாக்கு சேகரிப்பதில் அவரின் கால்களில்கடுமையான வலி ஏற்பட்டதால், இரு நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டுக்கு கிளம்பிப் போய்விட்டார் குஷ்பு.

Advertisment

கால் வலி சரியானதும் மீண்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்கு சேகரிப்பின்போது, தனக்கு போடும் சால்வைகளை அப்படியே வாக்காளர்களுக்கு அணிவித்தும், குழந்தைகளைக் கொஞ்சியும் அவர்களைக் குதூகலப்படுத்துகிறார் குஷ்பு. இந்த நிலையில், பாஜகவின் 'ஸ்டார்' பேச்சாளரான நடிகை நமீதா, குஷ்புவை ஆதரித்து ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் செய்ய விரும்பியுள்ளார். அது குறித்த தகவலும் குஷ்புவுக்கு தெரிவிக்கப்பட்டது.

Advertisment

குஷ்புவை தொடர்புகொண்டு பேசவும் முயற்சித்துள்ளார் நமீதா. ஆனால், குஷ்புவிடமிருந்து நோ ரெஸ்பான்ஸ்.குஷ்புவிற்காக பிரச்சாரம் செய்ய நமீதா விரும்பியதை அறிந்த பாஜக தலைமை, “குஷ்புவே ஒரு ஸ்டார்தான்.அவருக்கு நீங்க பிரச்சாரம் செய்ய ஆர்வம் காட்ட வேண்டாம். பாஜகவின் மற்ற தொகுதிகளுக்குப் போய் வாருங்கள்” என நமீதாவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறது. இதனால்குஷ்புவை மறந்துவிட்டார் நமீதா.

tn assembly election 2021 actress namitha kushboo
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe