Advertisment

வைகோவின் பேச்சை ரசித்த கேரளா எம்.பிக்கள்!

தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பாக மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மதிமுக பொது செயலாளர் வைகோ. நேற்று நாடாளுமன்றத்தில் வைகோ பேசும் போது, நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் பொட்டிபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நியுட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை குடைய உள்ளனர். மலையை குடைய சுமார் 1200 டன் டைனமைட் வெடிப் பொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 12 லட்சம் டன் எடையுள்ள பெரிய பாறைகளை உடைத்து நொறுக்க உள்ளனர்.

Advertisment

mdmk

இதற்காகவே வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட உள்ளது. பொட்டிபுரத்தில் மலையை குடைய டைனமைட் வைக்கும் போது அருகே 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி அணை உடையும். இதே போல் முல்லைப் பெரியாறு அணையும் உடையும். மலையை குடைந்து சுமார் 11 லட்சம் டன் பாறைகளை அகற்ற உள்ளனர். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலே சீர்கெடும் என்று வைகோ நாடாளுமன்றத்தில் பேசினார். வைகோவின் பேச்சை ரசித்த கேரளா எம்.பி.க்கள் கை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

Kerala mdmk RajyaSabha vaiko
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe