மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷணன் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisment

KB

தூத்துக்குடியில் நடைபெற்ற 22ஆவது மாநில மாட்டின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை அவர் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் விவசாயிகள் சங்கச் செயலாளராகவும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவராகவும் இவர் செயல்பட்டிருக்கிறார். பிரேமானந்தா வழக்கு, வாச்சாத்தி கொடுமைகளுக்கு எதிரான வழக்குகளில் உறுதியாக நின்று போராடியவர்.

இந்த மாநாட்டில் ஜி.ராமகிருஷணன் மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ஒரு சாராரும், ஆர்.உமாநாத்தின் மகள் உ.வாசுகி மாநிலச் செயலாளராக முயற்சி செய்வதாக ஒரு சாராரும் பேசிவந்த நிலையில், கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருப்பதை கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்கிறார்கள்.

Advertisment

இவர் சிதம்பரம் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.