Skip to main content

வேட்பு மனுவை தாக்கல் செய்தார் கதிர் ஆனந்த்

Published on 17/07/2019 | Edited on 17/07/2019
Kathir-Anand



ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இவர் கடந்த 11ஆம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து பிரச்சாரத்தை துவங்கிவிட்டார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீப லட்சுமி போட்டியிடுகிறார். 
 

இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது, திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடனிருந்தனர். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலில் போட்டியிடவில்லை” - காங்கிரஸ் வேட்பாளர் திடீர் முடிவு

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க, உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த தலைவர்கள், சிட்டிங் எம்.பிக்கள் என ஒவ்வொருவரும் கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு ஹரியானா பா.ஜ.க எம்.பியான பிரிஜேந்திர சிங், பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அடுத்த நாளிலேயே, ராஜஸ்தான் பா.ஜ.க எம்.பி ராகுல் கஸ்வான் அக்கட்சியில் இருந்து விலகியும், எம்.பி பதவியை ராஜினாமா செய்தும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து, கடந்த 15ஆம் தேதி அசாம் மாநில காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக்கு, வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டு தனது உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 

குஜராத் மாநிலத்தில், முதல்வர் புபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், வரும் மே 7ஆம் தேதி அன்று மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூன் 4ஆம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை கடந்த 12ஆம் தேதி அன்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹன் குப்தா, அகமதாபாத் கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக தெரிவித்திருந்தது. 

Congress candidate's sudden decision on withdrawing candidature in parliament election in gujarat

தேர்தல் தேதி நெருங்கும் இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ரோஹன் குப்தா அறிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மோசமான உடல்நிலை காரணமாக, எனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால், அகமதாபாத் கிழக்கு நாடாளுமன்றத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக நான், வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். கட்சியால் பரிந்துரைக்கப்படும் புதிய வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்குவேன்” என்று பதிவிட்டுள்ளார். ரோஹன் குப்தா போட்டியிடுவதாக இருந்த அகமதாபாத் தொகுதியில் தற்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஹஸ்முக் பட்டேல், நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், குஜராத் மாநிலத்தில் உள்ள  26 தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“ஏழை மக்களின் வரிப்பணத்தை சொந்தமாக்கி கொள்வது தவறு” - பாரிவேந்தர்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Taking tax money from poor people is wrong says Paarivendhar

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்பு திமுக கூட்டணியில் இருந்து விலகிய பாரிவேந்தர் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதே பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாரிவேந்தர், “கடந்த 5 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது மத்திய அரசு வழங்கிய ரூ. 17.5 கோடி முழுவதும் மக்கள் நலப்பணிக்கு செலவிடப்பட்டது. இதில் பெரம்பலுாருக்கு ரூ. 3.37 கோடி, லால்குடிக்கு ரூ.3.32 கோடி, மண்ணச்சநல்லுாருக்கு ரூ.2.80 கோடி, துறையூருக்கு  ரூ.3.79 கோடி, முசிறிக்கு ரூ.2.40 கோடி, குளித்தலைக்கு ரூ. 2.73 கோடி செலவிடப்பட்டது. இதில் பெரும்பகுதி தொகை அரசு பள்ளி மாணவர்களுக்கான வகுப்பறைகள், கழிவறை, நீர்த்தொட்டிகள் கட்டப்பட்டது. இது தவிர எனது சொந்த செலவில் ரூ. 126 கோடி பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டிற்கு செலவிடப்பட்டுள்ளது. பெரம்பலுார் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எஸ்.ஆர்.எம் கல்லுாரிகளில் கல்வி கற்பதற்கு, உறைவிடம் ஆகியவற்றுக்கு மட்டும் ரூ. 118 கோடி செலவிடப்பட்டது. கரோனா காலத்தில் 2 ஆம்புலன்ஸ், மருத்துவமனைக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள் வழங்கப்பட்டது. பல கோயில்களை புனரமைப்பதற்காக ரூ. 4கோடியே 80 லட்சம் வழங்கப்பட்டது.

சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர், சிறுகனுார், இருங்களூர் ஆகிய ஊர்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. கோடை காலங்களில் பெரம்பலுார் உள்ளிட்ட பகுதிகளில் நீர்த்தேவைகள் நிறைவேற்றப்பட்டது. காமராஜர் ஆட்சியில் திட்டமிடப்பட்ட துறையூர், பெரம்பலுார், அரியலுார், நாமக்கல் ஆகிய  பகுதிகளை ரயில்வே பாதை மூலம் இணைக்கும் பணிக்கான மறு ஆய்வு சமீபத்தில் நடந்துள்ளது. ஆயிரம் கோடி மதிப்பிலான  இந்த  திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்த பகுதிகள் மேம்பாடு அடையும். 2025ம் ஆண்டிற்குள் இந்த ரயில் பாதை மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என ரயில்வே துறை உறுதியளித்துள்ளது. பாராளுமன்றத்தில் 268 கேள்விகள், 39 பங்கேற்ற விவாதங்களில் பங்கேற்றேன். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் பாஜ கட்சி கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன். ஏழை மக்கள் கட்டும் வரிப்பணத்தை தங்களுக்கு சொந்தமாக்கி கொள்வது தவறானது. சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட பல நாடுகளில் திமுகவினர் லஞ்சப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். தங்களுக்கு சாதகமாக இல்லாத தொலைக்காட்சியை செயலாற்ற விடுவதில்லை. அரசாங்கத்தில் எந்த செயல் நடக்க வேண்டும் என்றாலும் லஞ்சம் தர வேண்டிய நிலைமை உள்ளது. தங்கள் குடும்பமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற பதவி வெறி வந்தவுடன் நேர்மை மறைந்து விட்டது.

தேர்தலில் அனைத்துக் கட்சியினரும் தனியாக நின்றால்தான் சொந்த பலம் தெரிய வரும். அரசியலுக்கு வருபவர்கள் ஆதாயம் நினைத்து வரக் கூடாது என அண்ணா சொன்னதை திமுகவினர் மறந்து விட்டனர். அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் கலைஞர் பெயரை வைப்பது எவ்விதத்தில் நியாயம். இதுபோல செய்தால் மக்களுக்கு அலுப்பு வந்துவிடும். உங்கள் சொந்தக் கட்சி செலவில் எதுவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். விளம்பரத்தால் மட்டுமே வாழ முடியாது. காமராஜர் எந்த திட்டத்திற்கும் தனது பெயரை வைக்க விரும்ப மாட்டார். திமுகவிடம் தேசிய பார்வையில்லாததால் அந்த அணியிலிருந்து நான் விலக நேரிட்டது. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தேசிய பார்வை இருக்க வேண்டும்” என்றார்.