ss

‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன் 15.07.2020 இரவு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியிலுள்ள, பெரியார் படிப்பகத்தில் இருந்தடி தமிழக போலீசாரிடம் சரணடைய காத்திருந்தார். பின்னர் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். புதுச்சேரியில் சரணடைந்த சுரேந்திரனை தமிழக போலீசார் சென்னை அழைத்து சென்றனர்.

புதுச்சேரியிலிருந்து சுரேந்திரனை மத்திய குற்றப்பிரிவு சென்னை போலீசார் அழைத்து வந்து விசாரித்தபின் சுரேந்தர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டகறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு 30- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில், கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கந்த சஷ்டி கவசத்தை விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.