karunas actor

Advertisment

நாகை மாவட்டம் வடவூர் கிராமத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூட கட்டிடத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் திறந்து வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன், "நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற எண்ணத்தில் இல்லாமல் விவசாயிகள் அனைவரும் வாங்கிய கடனை முறையாக செலுத்த வேண்டும். என்றார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.எஸ்.மணியன், "மக்கள் விரோத திட்டங்களுக்கு தமிழக அரசு இதுவரை எந்த ஒரு அனுமதியையும் வழங்கியது இல்லை. மக்களை பாதிக்கும் மத்திய அரசின் பல திட்டங்களை மாநில அரசு ரத்து செய்துள்ளது என்றார்.

Advertisment

os manian

மேலும், இடங்களை சேட் லைட் மூலம் மத்திய அரசு தேர்வு செய்வதாக விமர்சித்த ஓஎஸ்.மணியன், மாநில அரசு அனுமதி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியும் என்று கூறினார்.

ஆதாரத்தை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்று கருணாஸ் கூறியுள்ளது குறித்து பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கூவத்தூரில் அமைச்சர்கள் இட்லி, சட்னி, சாப்பாடு சாப்பிட்ட ஆதாரம் மட்டுமே கருணாஸிடம் உள்ளது என்றும், இந்த ஆதாரங்களை வெளியிடட்டும் என்றும் கிண்டலடித்து பேசினார்.