Advertisment

விஷாலின் ஈகோ தான் காரணம்...கருணாஸ் அதிரடி! 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் கலெக்டரை சந்திக்க கருணாஸ் வரும் போது இடுப்பில் துப்பாக்கி வைத்திருந்ததை பார்த்து போலீஸார் மற்றும் அங்கு இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிட பணிகள் தாமதமாக நடிகர் விஷால் மற்றும் ஐசரி கணேசனின் தனிப்பட்ட ஈகோ பிரச்சனையே காரணம் என்று கூறினார்.

Advertisment

vishal

தொடர்ந்து பேசிய கருணாஸ் வேதாரண்யம் பிரச்சனையில் தமிழக காவல்துறை ஒரு தரப்பினர் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஆயுதங்களோடு வந்த இன்னொரு தரப்பினரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினார். இன்னொரு தரப்பினர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவிட்டால் எனது தலைமையில் வேதாரண்யத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார். பின்பு ஜெயலலிதா இருந்து இருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருப்பர் என்றும் தெரிவித்தார். சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது, சசிகலா மற்றும் தினகரன் இவர்களை தவிர வேறு யாரு வந்தாலும் கட்சியில் சேரலாம் என்று கூறினார். அமைச்சர் ஜெயக்குமார் கூறிய நிலைப்பாட்டில் விரைவில் மாற்றம் வரும் என்று தெரிவித்தார்.

vishal minister karunas actor admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe