karunas Issue

Advertisment

திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் நடிகர் கர்ணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 01-09-17 அன்று நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவிற்கு மரியாதை செலுத்த வந்தபோது தமிழ்நாடு தேவர் பேரவை அமைப்பினரோடு ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக அன்று புளியங்குடி காவல்நிலைத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.