Advertisment

கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழா - சட்டப்பேரவையில் அறிவிப்பு 

mk stalin

Advertisment

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் இனி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெற்றவர் கலைஞர் எனப் புகழாரம் சூட்டி, தமிழகத்திற்கு அவர் செய்த அனைத்து நலத்திட்டங்களையும் பட்டியலிட்டார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், இத்தகைய மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக்கடமையை செய்ய நினைக்கிறது. கலைஞர் பிறந்ததினமான ஜூன் 3ஆம் நாள் இனி அரசு விழாவாக தமிழகத்தில் கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞருக்குகம்பீர சிலை நிறுவப்படும் என்றும் தெரிவித்தார்.

kalaingar karunanitni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe