உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

karthi chidambaram questions duraimurugan

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, " திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் கவலை இல்லை. அவர்கள் விலகுவதால் எங்களுக்கு என்ன நஷ்டம்?. காங்கிரஸ் விலகினாலும் கூட அது எங்கள் வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை" என தெரிவித்தார். துரைமுருகன் இப்படி பேசிய விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கார்த்தி சிதம்பரம் "வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் இந்த ஞானம் ஏன் வரவில்லை?" என கேள்வியெழுப்பி உள்ளார்.

Advertisment