ADVERTISEMENT

ராகுலால் பறிபோனதா கர்நாடகா அரசு?

12:55 PM Jul 24, 2019 | Anonymous (not verified)

கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தால், 17 நாட்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது. கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான நான்கு நாள் விவாதத்திற்கு பிறகு நேற்று மாலை 07.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து கர்நாடகாவில் எடியூரப்பா ஓரிரு நாட்களில் முதல்வராக பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவிக்கின்றனர். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு, ராகுல் காந்தியின் அணுகுமுறையே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அரசியல் கட்சியினரிடையே விசாரித்த போது பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்களை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக பலவீனமாக உள்ள மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கை மூலம் வலுப்படுத்தவும் திட்டம் போட்டுள்ளனர் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT