Advertisment

சபாநாயகர் உத்தரவால் அதிர்ச்சியடைந்த குமாரசாமி! கர்நாடக அரசியலில் பரபரப்பு!

கர்நாடக மாநிலத்தில் எப்போது ஆட்சி கலையும் என்ற சூழல் உருவாகியுள்ளது. தற்போது ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் 16 எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தன. இருந்தபோதிலும் பலனில்லை.

Advertisment

karnataka

ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நங்கள் சட்டசபைக்கு வருவதற்கு மேலும் அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் வேறு ஒருவரை முதல்வராக தேர்ந்த்தெடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று அவையை ஒத்திவைக்கும் கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவர் தேஷ்பாண்டே கேட்டுக்கொண்டார். அதன்படி அவை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மாலை 6.00 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கால அவகாசம் கேட்டு இருந்த நிலையில், சபாநாயகர் அறிவித்து இருப்பது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

politics kumarasamy congress karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe