Advertisment

காவிரி குறித்து பேசிய கர்நாடக அமைச்சர் மேகதாதுவுக்கு மௌனம்! 

 Karnataka Minister  who spoke about Cauvery!  Silence to Megha Dadu

கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சருமான ஈஸ்வரப்பா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வரப்பா, “கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கர்நாடக மக்களும் தமிழ்நாட்டு மக்களும் சகோதர, சகோதரிகளாக உள்ளனர். காவிரி விவகாரத்தில் அரசியல்வாதிகளால் அரசியல் செய்யப்படுகிறது. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை இருவரும் கடைப்பிடிக்க வேண்டும். காவிரி பிரச்சனை அரசியல் பிரச்சனையாக மாற்றப்பட்டுள்ளது. சில நபர்கள் காவிரி விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகின்றனர். காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்சனையே இல்லை. தமிழகமும்கர்நாடகமும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும். காவிரி தூய்மையாக உள்ளது. காவிரி தமிழக விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் ஆசீர்வதிக்கும்” என கூறினார். மேகதாது அணை குறித்த கேள்விக்குப் பதில் அளிக்காமல் புறப்பட்டுச் சென்றார்.

Advertisment

karnataka madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe