Advertisment

கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்திற்கு சித்தராமையா காரணமா? குமாரசாமி அதிர்ச்சி! 

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். இந்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடகவில் ஆட்சி அமைக்க சட்டசபையில் 112 உறுப்பினர்களின் எண்ணிக்கை வேண்டும் என்ற நிலையில், பாஜகவிடம் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாஜக ஆட்சி அமைத்தாலும் நீடிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்று கொண்டார்.

Advertisment

karnataka

இந்நிலையில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் ஒருவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது, சித்தராமையா சொன்னதால் தான் நாங்கள் ராஜினாமா செய்தோம். எங்களுடைய ராஜினாமாவிற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை' என கூறிவிட்டு சென்றார் என்று சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து எனக்கும் எம்எல்ஏக்கள் ராஜினாமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார். மேலும் அவர்கள் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.' எனவும் கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ சித்தராமையா பெயரை குறிப்பிட்டு சொன்னது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஆகியுள்ளது. இந்த தகவலால் குமாரசாமி தரப்பு அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்று கூறுகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

sitharamaiya kumarasamy karnataka congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe