Karnataka Assembly Elections; Voting is over

கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப் பேரவைக்கு இன்று (மே 10, 2023) தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ளன. 224 தொகுதிகளில் 918 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 2615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

Advertisment

இதில் தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோவன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரும் போட்டியிடுகின்றனர். கல்புர்கி மாவட்டம் சித்தாபுரா தொகுதியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கேவும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி சன்னப்பட்டினா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். எச்.டி.தேவகவுடா பேரன் நிகில் குமாரசாமி ராமநகரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

Advertisment

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வாக்களித்த பின் மொத்தமாக பதிவான வாக்குகள் சதவீதத்தில் தெரிவிக்கப்படும்.பிற்பகல் 3 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் 52.03% வாக்குகள் பதிவானநிலையில் மாலை 4 மணி நிலவரப்படி மொத்தமாக 65.69% வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தற்போது கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.