அதிமுகவிற்கு போகும் கராத்தே தியாகராஜன்?

காங்கிரஸில் இருந்து தென்சென்னை தலைவரான கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பாகியது. அ.தி.மு.க.வுக்கு ரஜினி தலைமை ஏற்கணும்ன்னு பா.ஜ.க. தரப்பில் இருந்து சொல்லப்பட்டு வந்த நிலையில், ரஜினிக்கு நெருக்கமானவரான கராத்தே தியாகராஜன், அ.தி.மு.க.வுக்குப் போகப்போறார்ங்கிற டாக் பரபரப்பா அடிபடத்தொடங்கியிருக்கு.

congress

இது தொடர்பா காங்கிரஸ் தரப்பில் விசாரிச்சப்ப, வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் அவரை சென்னை மாநகரின் பவர்ஃபுல் போஸ்ட்டில் உட்காரவைப்பதாக உறுதிகொடுத்து, அ.தி.மு.க. தரப்பு அணுகுச்சுன்னும், அதைத் தொடர்ந்துதான் அவர் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி குறித்த விமர்சனத்தை பகிரங்கமா வச்சாருன்னும் ஒரு தரப்பு சொல்லுது. ரஜினிக்கு எப்போதும் நண்பரான கராத்தே தியாகராஜன் பதவிக்காக எங்கேயும் போகமாட்டாருன்னு அவர் தரப்பில் சொல்றாங்க. ஆனால் அதிமுக தலைமை அவரை அதிமுகவில் இணைக்க முயற்சி எடுத்து வருகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

admk congress karate thiagarajan politics
இதையும் படியுங்கள்
Subscribe