தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சென்னை மாநகராட்சியை கைப்பற்ற வேண்டுமென்பது பா.ஜ.க.வின் பெரிய திட்டமாக உள்ளது. இந்தச் சூழலில், சென்னை மாநகராட்சியின் கள நிலவரங்களைப் பற்றி முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜனிடமிருந்து சில பல தகவல்களை அரசியலுக்கு சம்பந்தமில்லாத முக்கிய பிரமுகர் மூலம் கேட்டுப்பெற்றுள்ளது பா.ஜ.க. அந்த வகையில், சென்னையில் தற்போது தென்சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என 3 எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.

Advertisment

bjp

அதனை மையமாக வைத்து சென்னை பெருநகர மாநகராட்சியை 3 மாநகராட்சியாகவும், 15 ஆயிரம் வாக்குகளுக்கு ஒரு கவுன்சிலர் எனவும் பிரிப்பதன் மூலம் பா.ஜ.க.வின் இலக்கு சாத்தியமாகும் என கராத்தே தியாகராஜன் தகவல் தந்துள்ளார். இதற்கிடையே தமிழக பாஜக தலைவராக யாரை நியமிக்கிலாம் என்று தமிழிசையிடம் மோடியும், அமித்ஷாவும் என்று கேட்டுள்ளதாக கூறுகின்றனர். தமிழிசையும் தனது கருத்தை பாஜக மேலிடத்தில் கூறியதாக சொல்லப்படுகிறது.