Advertisment

கூட்டத்திலேயே அழகிரி என்னை ஏன் கண்டிக்கவில்லை? கராத்தே தியாகராஜன் பேட்டி

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். சமீபத்தில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் ஆலோனைக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.கராத்தே தியாகராஜன் இன்று சென்னையில் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினார்.

Advertisment

karate thiagarajan

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன்,

நான் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அன்பை பெற்றவன் அவருக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். எந்த கட்சிக்கும் போக மாட்டேன். நான் மிகவும் மதிக்கும் தலைவரான ப.சிதம்பரத்துக்கு விசுவாசமாக இருப்பேன். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக அவர் சில விவரங்களை கேட்டார். நானும் சில விளக்கங்களை அளித்திருக்கிறேன்.

Advertisment

வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கூட்டத்தில் பல தலைவர்கள் பேசினார்கள். ஆனால், எனக்கு மட்டும் கட்சியில் நெருக்கடி தருகின்றனர். இது கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு தெரிந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையா? அல்லது நேரடியாக வேணுகோபால் எடுத்தாரா? என தெரியவில்லை.

ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நான் பேசவில்லை. நான் பேசியது தவறு என்றால், கூட்டத்திலேயே அழகிரி என்னை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் விளக்கம் கேட்கவில்லை? விஜயதாரணி எம்எல்ஏ மோடியை ஆதரித்து பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அழகிரிக்கு தெரியாமல் என் மீது நடவடிக்கை எடுத்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் திமுக மீது பழி போடுகிறார். இவ்வாறு கூறினார்.

sathiyamoorthy bhavan P chidambaram congress K S Azhagiri karate thiagarajan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe