Advertisment

தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: அமமுக பெண் நிர்வாகி மீது வழக்கு பதிவு

குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவா் பிரபா. இவா் அமமுக மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ளார். இவா் ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன் அதிமுகவில் இருக்கும்போது எடப்பாடிக்கு பழனிச்சாமிக்கு நெருக்கமானவா் என கூறி திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்த சஜின் என்பவரிடம் தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் வாங்கினாராம்.

Advertisment

 kumari

அதன்பிறகு பிரபா அமமுகவில் சோ்ந்ததால் அவரால் வேலை வாங்கி கொடுக்க முடியாமல் சஜினை ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு தினமும் பிரபா வீட்டுக்கு சென்றுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் பிரபா வீட்டு்க்கு மீண்டும் பணம் கேட்டு சென்ற சஜினியை பிரபாவும் அவரது கணவா் மற்றும் மகனும் சோ்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சஜின் கொடுத்த புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் மூன்று போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனா். இதனால் தற்போது மூன்று பேரும் தலைமறைவாக உள்ளனா்.

COMPLIMENT goverment Kanyakumari work Youth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe