Advertisment

விமர்சிக்க முடியாத அளவிற்குத் தண்டனை இருக்க வேண்டும்! - 'கறுப்பர் கூட்டம்' குறித்து சரத்குமார் கருத்து!

sarathkumar

Advertisment

பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வருகின்ற கலாசாரம், தெய்வ வழிபாடு, நம்பிக்கை, இவைகளைக் கொச்சைப் படுத்துவர்களுக்குக் கொடுக்கிற தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கு எந்த அறிவு மூடர்களும் வாய்திறவாமல் நம் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் சரத்குமார் கூறியிருப்பதாவது,

கறுப்பர் கூட்டம் நாம் வணங்கும் முருகக் கடவுளை இழிவு படுத்தியதை அறிக்கையாக வெளியிடாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரத்யேகமாக நாளை சொல்வதற்குள், நான் கறுப்பர் கூட்டத்தை விமர்சிக்கவில்லை என்ற உங்கள் ஆதங்கத்தை நான் அறிவேன்.

இதோ என் கருத்து...

தினமும் முருகனைத் துதித்து 108 முறை ஓம் நமசிவாய என்று சிவ பூஜை செய்து, தாய் தந்தையரை வணங்கி சமத்துவமாக இருத்தல் அவசியம் என்று நாளை துவங்குகின்ற என் கருத்து..

Advertisment

கறுப்பர் கூட்டமே நீங்கள் இயக்கிவிடப்பட்ட மூடர்கள். "உதவிசெய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தரவேண்டாம்" என்பது பழமொழி.

பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வருகின்ற கலாசாரம், தெய்வ வழிபாடு, நம்பிக்கை, இவைகளைக் கொச்சைப் படுத்துவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கு எந்த அறிவு மூடர்களும் வாய் திறவாமல் நம் ஹிந்துக்கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும்.

கனவில்கூட அவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது, தப்பித் தவறி கனவில் வந்தால் உடனே எழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்.

எந்த மதத்தையும் இழிவு படுத்தக்கூடாது என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் இவர்கள்.

ஒரு வாதத்திற்கு கேட்கிறேன் இந்தக் கறுப்பர் மந்தைகள் மற்ற மதத்தை அந்த மதப் போதனைகளை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா????

ஹிந்துக்களை, ஹிந்துமதத்தை இழிவுபடுத்தினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று தொடர்ந்து விமர்சிக்கின்ற கூட்டத்தைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாடம் புகட்டவேண்டும்.

விளம்பரம் தேடுபவர்கள் ஒடுக்கப்பட்ட வேண்டும்

முருகா நான் சிறப்பாக, ஆரோக்கியமாக நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு என் உடலில் உள்ள அனைத்து அங்கங்களைப் பாதுகாப்பாயாக என வேண்டுவதில் கறுப்ப மந்தைகளே உங்களுக்கு என்னடா பிரச்சனை.

கறுப்பர் கூட்டமே உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

SMK PARTY actor sarathkumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe