திமுக மகளிரணி செயலாளராக உள்ள கனிமொழி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை விருப்ப மனு அளித்துள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் போட்டியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisment

tamilisaisoundararajan-Kanimozhi

இந்த நிலையில் திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிரு‌ஷ்ணனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுவதாகவும், அவரை எதிர்த்து பா.ஜனதாவில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவதாகவும் பத்திரிகையாளர்கள்தான் கூறி வருகின்றனர். கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும்போதுதான் அதை பற்றி உறுதியாக தெரியவரும்’’ என்றார்.

Advertisment

pon radhakrishnan

மேலும் பேசிய அவர், அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார்.