கனிமொழி மத்திய அமைச்சராகும் வாய்ப்பு - கீதாஜீவன் பேச்சு

kanimozhi

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி சபை கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான பெ.கீதாஜீவன் கலந்து கொண்டார்.

கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர்,

ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வந்த பின்னர் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் நலிவடைந்து விட்டன. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என தமிழக அமைச்சரே தெரிவித்துள்ளார். எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

geetha jeevan

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். ஏற்கெனவே 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் அவர், ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும்போது, அவர் மத்திய அமைச்சராககூட வரலாம் என்றார்.

Geetha jeevan kanimozhi MLA parliment Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe