பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார் கனிமொழி (படம்)

ttttt

2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக திமுக மகளிரணித் தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்தநிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வாக்குப்பதிவு நாளான இன்று மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்கலாம் என தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

ttttt

சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர், இன்று வாக்குப்பதிவு என்பதால் மாலையில் கரோனா உடையணிந்து சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

''எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இன்று என்னால் ஓட்டளிக்க முடிந்தது. நமது அடுத்த அரசைத் தேர்வு செய்ய, உடல் நலப்பாதிப்பு ஒரு தடையல்ல என்பதை உறுதி செய்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி'' எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

corona kanimozhi vote
இதையும் படியுங்கள்
Subscribe