இன்று திருவெறும்பூர் சட்டமன்ற வேட்பாளர் திமுகவைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவரம்பூர் பகுதிகளுக்கு உட்பட்ட பொன்மலை பகுதியில் இன்று அதிகாலையிலேயே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர்களுக்கு பெண்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். பெரும்பாலான பெண்கள் கூடியிருந்து அதிகாலையிலிருந்து பிரச்சாரம் நடத்தினார்கள். இந்நிலையில் இன்று திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “தன்னை முதல்வராக்கிய சசிகலாவை கட்சியைவிட்டு நீக்கி துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத மோசமான ஆட்சி இது” என்று பேசினார்.