எப்படி இருக்க? உனக்கு என்னை நியாபகம் இருக்கா... முதல்வராயிட்ட வேற... கலைஞர் பற்றி கனிமொழி பகிர்ந்த நினைவுகள்! 

dmk

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி (இன்று)தமிழகம் முழுவதும் விமர்சையாகக் கொண்டாடுவார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். இந்த வருடம், கரோனா பாதிப்பில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால் அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தி.மு.க.

இந்த நிலையில் தூத்துக்குடி தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கலைஞரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் கூறி ட்வீட் செய்துள்ளார். அதில், அப்பா! உங்களைப்போல் ஒரு தலைவனைத் தந்தையாகவும் பெற்றது மறுபிறவியற்ற இந்த வாழ்க்கையின் பெரும் பேறு என்றும் கூறியுள்ளார்.

kalaingar kanimozhi Speech
இதையும் படியுங்கள்
Subscribe