நடிகர் சரத்குமாருக்கு நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் முன் முயற்சியில் விருதுநகரில் முன்னாள் முதல்வர் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.இதனை இன்று காணொளி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.இந்நிகழ்வுக்கு சரத்குமார், மு.தமிமுன் அன்சாயை பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.அன்று காலையில் தஞ்சையில் ஒரு திருமண நிகழ்வும், மாலையில் சட்டமன்ற நிகழ்வும் இருப்பதால் அவரால் கலந்துக் கொள்ள முடியவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sarath-Kumar - THAMIMUN ANSARI.jpg)
எனவே, மணி மண்டப திறப்பு விழாவையொட்டி சரத்குமாருக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தான் மிகவும் மதிக்கும் நேர்மையான தலைவர் அவர் என்றும், அவர் தொடர்பான நூல்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இலவசமாக தொடர்ந்து விநியோகித்து வருவதாகவும் விரைவில் அந்த மணிமண்டபத்திற்கு மஜக நிர்வாகிகளோடு வருவதாகவும், திறப்பு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார் என்று மஜக தகவல் தொழில்நுட்ப அணி தெரிவித்துள்ளது.
Follow Us