Skip to main content

"மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு காமராஜர், ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும்!" -முதல்வருக்கு நாடார் சங்கம் வலியுறுத்தல்

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
metro train

 

 

சென்னையில் உள்ள மெட்ரோ நிலையத்திற்கு காமராஜர், ஆதித்தனார் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வைத்திருக்கிறது தமிழ்நாடு நாடார் மகாஜன சங்கம். இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ள இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சதீஷ்மோகன், "ஏழைகள் ஏற்றம் பெற, கல்வி செல்வத்தை நீக்கமற அனைவருக்கும் இலவசமாக கொடுத்து, கூடவே பசியாற உணவும் வழங்கி வலிமையான தமிழகத்திற்கு அடித்தளமிட்டவர் காமராஜர். தமிழகத்தை பாரதத்தின் முன்னோடி தொழில் மாநிலமாக வழிநடத்திய மக்கள் தலைவர்.

 

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் முதல் திருத்தம் கொண்டு வந்த பிதாமகன். தன் செயல்களால் பெருந்தலைவர் என இன்றுவரை போற்றப்படுகிறவர் ஐயா காமராஜர், சாமான்ய தமிழன் பொருளாதார வளமும், கல்வி ஞானமும் பெற்று பெருவாழ்வு பெற வித்திட்டவர். 

 

அதேபோல, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழில், செருப்பு செப்பனிடும் தொழிலாளியும், ரிக்சா ஓட்டும் பாமரனும், டேபிள் துடைக்கும் தினக்கூலியும் எழுத்து கூட்டி வாசிக்கவும், வாசித்ததை யோசிக்கவும் வைத்தவர் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார். அதனாலேயே தமிழர் தந்தை என போற்றப்படுபவர். 

 

உலக நிகழ்வுகளை பாமர தமிழனும் அறிந்திட உதவிய பத்திரிகை ஞானி அவர். நாடறிந்த நற்றமிழ் தலைவர் காமராஜர் பெயரை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரை எழும்பூர் மெட்ரோ நிலையத்திற்கும்  சூட்டிட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார் சதீஷ்மோகன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள்; புதிய சர்ச்சை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Chinese Names in Arunachal Pradesh; New controversy!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமைக் கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 வது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “மோடி செய்தது என்ன?. 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ‘எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை’ என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது” எனக் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.