madurai

நடிகர் கமல்ஹாசன் நாளை 21.2.2018 -ல் அரசியல் கட்சி தொடங்குகிறார். கட்சியின் பெயர், கட்சியின் கொடி, கொள்கைகளை முதலியவற்றை மதுரையில் நாளை நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கிறார்.

Advertisment

முன்னதாக அவர் நாளை ராமேஸ்வரத்தில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் மரியாதை செலுத்திவிட்டு அரசியல் பயணத்தை துவங்குகிறார். இதற்காக அவர் இன்று விமானம் மூலம் மதுரை சென்றார்.

Advertisment

கமல்ஹாசன் தொடங்கவிருக்கும் புதிய கட்சியின் பெயர் 'திராவிட மக்கள் கட்சி', 'திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம்', 'நமது தமிழகம்', 'மக்கள் முன்னேற்ற கழகம்' என்பனவற்றில் ஏதேனும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறிவருகிறார்கள். ஆனாலும், திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயர்தான் கமல் கட்சியின் பெயர் என்று பெரும்பான்மையினர் தெரிவிக்கின்றனர்.