"திராவிடச் சிந்தனையின் தெளிவுரை" அன்பழகன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் காலமான நிலையில், அவரின் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்தெரிவித்துள்ளார்.

kamalhassan on anbazhagan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் (98) இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார். க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கத்தின் ஆஸ்திரன் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலிற்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்பழகன் இழப்புக்கு 'மக்கள் நீதி மய்யம்' தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில், "தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிடச் சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

K. Anbazhagan
இதையும் படியுங்கள்
Subscribe