kamalhassan about tasmac reopening in chennai

Advertisment

நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

கரோனா பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனையடுத்து, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் இயங்கும் மதுக்கடைகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், சென்னையில் மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தன. இந்தச்சூழலில், சென்னையில் ஆகஸ்ட் 18 முதல் மதுக்கடைகள் திறக்கலாம் எனத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

அதன்படி, நாளை முதல் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், தமிழக அரசின் இந்த முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "காய்கறி வாங்கச் சென்றவருக்கு கரோனா, வழிபாட்டுத் தலம் சென்றவருக்கும் கரோனா, பணியிடத்தில் மருத்துவர், செவிலியர், காவலர் என எங்கும் கரோனா என்று அரசு கூறுகிறது. மதுக் கடைகளில் மட்டும் இன்னும் கரோனா தென்படாததால் சென்னையில் நாளை திறக்கப்படுகிறதா சாராய அணைக்கட்டின் மதகுகள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.