Advertisment

“திறவா நெடுங்கதவை பாடி திறந்தார் திருஞானசம்பந்தர்.. ஊழல் கோட்டையை உதைத்து திறக்க வேண்டும்” - கமல்ஹாசன்

kamalhasan speech at vetharanyam

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதாரண்யத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வேதாரண்யம் என்றாலே புகையிலையும், உப்பும்தான் நினைவுக்கு வரும்.

Advertisment

சுதந்திர போராட்டம் எனும்போது, தனியாக ஒரு உச்சநிலை மனிதர்கள் நடத்துவது மட்டும் அல்ல ஒரு சாமானியன் செய்யும் புரட்சியும் அதற்கு சான்றுதான் அதற்கு உதாரணம் தியாகி வைரப்பன் போர் குணம் கொண்டவர். தலைவர்கள் அவமதிக்கப்படுவதை, புளியம் கொம்பால் அடிக்கப்பட்டு தெருவில் இழுத்து செல்வதை பார்த்த அவர், தான் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். இனி வெள்ளையர்களுக்கும், வெள்ளையர்களிடம் வேலை பார்க்கும் எவருக்கும் நாவித தொழில் செய்வதில்லை என்றும், அதை கடைபிடிக்கிறார். ஆனால், அதை செய்கிறார்.

Advertisment

இவர் இன்னார் என்று தெரியாமல் ஒருவருக்கு சவரன் செய்து கொண்டிருக்கும்போது ஒருவர் கேட்கிறார், ‘என்னப்பா வெள்ளையர்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் நீ சவரன் செய்ய மாட்டேன்..’ என்று கேட்டவுடன் அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு சென்று விடுகிறார். அதை ஒரு புகாராக நீதிபதி வரை செல்கிறது. நீதிபதி அவரை கூப்பிட்டு காசை வாங்கிக்கொண்டு பாதியில் ஒரு வேலையை விட்டு விட்டு செல்வது நியாயமில்லை. ஆதலால், நீ முடித்து கொடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு, வேண்டுமானால், நீங்கள் அந்த பாதி வேலையை பாருங்கள் என்று நீதிபதியை பார்த்து சொன்னார்.

அதற்காக அவருக்கு சிறை தண்டனையை கொடுத்தார் நீதிபதி. சுதந்திரம் நீங்கள் பிறக்கும் போது இருந்தது, அவர் பிறக்கும்போது சுதந்திரம் இல்லை. நீங்கள் அதை மறந்து விடாதீர்கள். ஆனால், நீங்கள் இன்றும் சுதந்திரம் இருப்பதாக நம்பி கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இல்லை. அதை மக்களுக்கே வாங்கி தரும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

வெள்ளைக்காரர்கள் தெரியாமல் உப்பு வரி போட்டார்கள். இன்றும், அப்படி ஒரு உப்பு வரி போட்டு வைத்திருக்கிறார்கள். அதுதான் ஜி.எஸ்.டி. அதைத்தான் எதிர்த்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றை எல்லாம் களைய மக்கள் நீதி மய்யம் வேண்டும்.இங்கே பல திட்டங்கள் இருக்கிறது. இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பு திட்டம், திறமையை வளர்த்து கொள்ள தேவையான திட்டம், முன்கூட்டியே திட்டமிட்டு செய்யக்கூடிய அரசாக மக்கள் நீதி மய்யம் இருக்கிறது.

நம்முடைய கட்சியின் பெருமை எதுவென்றால், தாய்மார்கள் நம்பி வந்து அமர்ந்து பேச்சை கேட்கிறார்களே அது தான். திறவா நெடுங்கதவை பாடி திறந்தார் திருஞானசம்பந்தர் வேதாரணீஸ்வரர் கோவிலில். ஆடியோ, பாடியே இந்த கதவை திறக்க முடியாது. எனவே, இந்த ஊழல் கோட்டையை உதைத்து திறக்க வேண்டும். எங்கள் கட்சிக்கு என்று ஒரு முறைமை இருக்கிறது, அது எங்கள் பேச்சிலும், அரசியலிலும் இருக்கும். எனவே, எங்களிடம் பழி வாங்கும் அரசியலோ, பழி போடும் அரசியலோ இல்லை; வழி காட்டும் அரசியல் இருக்கிறது.

கொள்கை என்ற பெயரில் மக்களுக்கான நன்மையை செய்ய தவறுவது அல்ல. மக்களுக்கான நன்மையை எப்படியாவது செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். விழா முடிந்த உடன் இந்த இடத்தை தூய்மைபடுத்திவிட்டு செல்லுங்கள். இது நம்முடைய இடம் என்பதை எப்போதும் உணர்ந்து செயல்படுங்கள்” என்று பேசினார்.

MNM kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe