Advertisment

“மிஸ்டர் ஹிட்லர்! இது ஜெர்மனி அல்ல!” - மோடியை தாக்கும் கமல் 

KamalHasan condemn about parliament band words

எம்.பி.க்களின் பேச்சுரிமையை பறிக்கும் வகையில், “நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஊழல், சர்வாதிகாரி, திறமையற்றவர், நாடகம், துரோகம், வாய் ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி போன்ற வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளன’’ என்று மக்களவை செயலாளர் அறிவித்திருக்கும் அறிவிப்பை கடுமையாக கண்டித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

Advertisment

இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள கமல்ஹாசன், “இந்த வார்த்தைகளை எம்.பி.க்கள் பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பேச்சுரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கை, ஜனநாயக குரல்வளையை நசுக்கும். தவறுகளைச் சுட்டிக்காட்டவோ, விமர்சனம் செய்யவோ இடமளிக்காத குடியரசையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கும்.

Advertisment

பிரதமர், அமைச்சர்களுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று கருதுவது ஆபத்தானது. பாராட்டுகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்க மன்னராட்சி முறை நடக்கின்றதா? வள்ளுவரைப் பற்றி பேசும் பிரதமருக்கு, ‘ இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன், கதியைச் சுட்டிக்காட்ட யாருமில்லையா? ஹிட்லராக மாற இது ஜெர்மனி அல்லவே” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் கமல்.

Parliament kamalhaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe