ADVERTISEMENT

"அவர மாதிரி டாக்டரா இருந்தா ஊசி போட்டு சம்பாரிச்சிருப்பேன்!"  - கமலின் காட்டமான பதில் 

11:15 AM May 25, 2019 | kamalkumar

மக்கள் நீதி மய்யம் தன் முதல் தேர்தலை சந்தித்திருக்கிறது. 5 தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறது, 12 தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 24 மே 2019 அன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் வாக்களித்த மக்களுக்கும் தேர்தல் பணிகளில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT

​​​​​​பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, "இத்தனை லட்சம் மக்கள் உங்களை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பு அதிகரித்திருக்கிறது. இனியும் முழு நேர அரசியலில் இல்லாமல் பிக் பாஸ், இந்தியன் என்று டிவி, திரைப்படத்துறைக்கு செல்வது சரியா?" என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதைக் கேட்டதும் கமலின் குரல் அதுவரை இருந்ததை விட உறுதியானது.

சற்றே சத்தமாக, "நான் முன்பே சொல்லியிருக்கிறேன், அரசியல் என் தொழில் அல்ல. அது என் எக்ஸ்டரா கரிக்குலர் கடமை (extra curricular). நான் இவரைப் போல டாக்டராக இருந்தால் (அருகில் நின்ற மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரனைக் காட்டி) ஊசி போட்டு சம்பாரிச்சிருப்பேன். மத்தவங்களுக்கு வைத்தியம் பாத்திருப்பேன். இப்போ எனக்கு தெரிஞ்ச தொழிலில் நேர்மையா சம்பாரிக்கிறேன். அது தப்பு கிடையாது. அரசியலை முழுசா தொழிலா வச்சுகிட்டாதான் தப்பு. நீங்க ஒரு நல்ல ஆஃபிஸ் கொடுங்க, பொறுப்பு கொடுங்க. கொடுத்து, 'இதை முழு நேரமா பாரு'ன்னு சொல்லுங்க. அப்போ நான் முழு நேரமா அரசியல் மட்டும் செய்றேன். மக்கள் நீதி மய்யத்தில் யாரும் அரசியலை முழு நேர தொழிலாக செய்ய மாட்டார்கள்" என்று உறுதியாகக் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT