வரவிறுக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வேலைகள் நாளுக்கு நாள் சூடுபிடித்துக்கொண்டே செல்கிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கிட்ட,தட்ட அனைத்து கட்சிகளும்பிரச்சாரம், பொதுக்கூட்டம் என களத்திலும், சமூகவலைதளங்கள், யூடியூப் என இணையத்திலும் ஒருங்கே பயணித்துக்கொண்டிருக்கின்றன.
மக்கள் நீதி மய்யம் தொடக்கத்திலிருந்தே இணையதளங்களில் தீவிர செயல்பாட்டில் இருக்கும் ஒரு கட்சி. தற்போது அதில்,ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் திமுக, அதிமுக, பாஜக, என ஒவ்வொருவரும் பேசுவது சேனல் மாற்ற, மாற்ற வருகிறது. முடிவில் ஹெச்.ராஜா பேசும்போது கமல்ஹாசன் டிவியை உடைக்கிறார். இவ்வாறாக அந்த வீடியோ நீள்கிறது. இந்த வீடியோ கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இது இணையத்தில் பரவி வருகிறது. மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்!
புது வெளிச்சம் பிறக்கட்டும்!
வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.
உங்கள் நான். pic.twitter.com/MUdNCjSsgb
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2019