நேற்று மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார். திமுக, அதிமுக குறித்த கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தார்.

Advertisment

kamalhaasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையைப் பார்த்தீர்கள், அதில் உங்களைக் கவர்ந்த ஏதேனும் வாக்குறுதிகள் இருக்கிறதா?

Advertisment

அவையெல்லாம் என்னை சிறிய வயதிலேயே ஈர்த்த வாக்குறுதிகள்தான். அதே வாக்குறுதிகளைத்தான் அவர்கள் திரும்பவும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதுதான் முக்கியம். அதை மக்கள் நீதி மய்யம் செய்ய முற்படும்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகிறதே?

முன்னாடி சொல்லுவாங்க ‘Land of Rising Sun’ என்று, தற்போது அந்த ஸ்பெல்லிங்கை மாற்றிவிட்டார்கள். SUN இல்லைங்க SON என்று.