இன்று அரவக்குறிச்சியில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்வதாக இருந்தது. ஆனால், பின்னர் அந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

Advertisment

kamalhaasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அரவக்குறிச்சியில் இரண்டாவது நாளாக பிரச்சாரம் செய்வதாக இருந்தார் கமல்ஹாசன். இரண்டாவது நாளான இன்று, அரவக்குறிச்சி நகர், தளவாபாளையம், புஞ்சை புகளூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். கடைசியாக வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிருந்தனர்.

Advertisment

திமுக வேட்பாளர்செந்தில்பாலாஜியைஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று இரண்டாவது நாளாக அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார். இந்த பிரச்சாரத்தின் ஒருபகுதியாக வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது. இதனால்தான் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரும் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு மதுரை கிளம்பினார். இதற்கு பதிலாக வரும் 16ம் தேதி அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன்.