நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் 4 சதவிகித வாக்குகளை பெற்றது. குறிப்பாக பொள்ளாச்சி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் மேல் வாக்கு பெற்று இந்த தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்தது. நகர் புற மக்களிடையே கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் அறியப்பட்டது. மேலும் புது வாக்காளர்களிடையே கமல் கட்சிக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இருந்தாலும் கமலின் கட்சி கிராம மக்களிடையே அதிகமாக சென்றடையவில்லை என்ற பேச்சும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் வரும் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சியை அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு செல்ல கமல் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இதனால் பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அனைத்து கட்சிகளுக்கும் தனியாக தொலைக்காட்சி இருப்பது போல் கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கும் தனியாக ஒரு செய்தி சேனலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, குறுகிய காலத்தில் கிராம மக்களை சென்றடையவும், கட்சியை வளர்க்கவும் ஒரு செய்தி சேனலை ஆரம்பிக்க நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். அதற்காக ஒரு பிரபல செய்தி சேனலை வாங்க கமல் உள்ளதாகவும் சொல்கின்றனர். ஆனால் கமல் தரப்பில் இருந்து இன்னும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வரவில்லை. வெகுவிரைவில் கமல் அறிவிப்பார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.