தமிழர்கள் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் வாரியம்! - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

"தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் துரோகம் செய்வதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் தற்போது செய்துள்ள ஒரு டீவீட்டில் இவ்வாறு கூறியுள்ளார்.

kamalhassan

இதில் அவர்,

"மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப் படுகையில் மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கிறது வாரியம். மாசுக்கட்டுப்பாடு வாரியமே விழித்தெழு"... என குறிப்பிட்டுள்ளார்.

காவிரிப்படுகையில் ஓஎன்ஜிசி கிணறுகள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டி இயங்குவது வெளியாகியுள்ளது. இதை கண்காணித்து கட்டுப்படுத்தத் தவறியமாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைஅன்புமணி ராமதாஸ் உள்ளிட்டபல்வேறு தலைவர்களும் கண்டித்து வருகின்றனர்.இது தொடர்பாகவே கமல் இந்தடீவீட்டை வெளியிட்டுள்ளார்.

kamalhaasan makkalneedhimaiam twitter
இதையும் படியுங்கள்
Subscribe