கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 நேற்று முதல் ஆரம்பமானது . இந்த முறை பங்கேற்கும் ஆட்கள் மாறுவதோடு, ஸ்பான்சரும் மாறியிருக்கு. அதோடு, செட் அமைப்புகளும் புதுசாகியிருக்கு. விருமாண்டி கெட்டப்பில் கமல் பெரிய மீசையோடு பங்கேற்பதால், செட்டுக்குள் அதே கெட்டப்பில் கட்அவுட் இருக்குது. இந்த டி.வி. புரோகிராமோடு, மக்கள் நீதி மய்யம் வளர்ச்சி பற்றியும் சைலன்ட்டா கமல் நிர்வாகிகளோடு ஆலோசித்து இருக்கிறார் என்ற தகவல் வந்தது.

Advertisment

mnm

நடந்து முடிஞ்ச தேர்தலில் கமலின் மக்கள் நீதி மையம் பல தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கு. அதோட தனிச்சி நின்ன அந்தக் கட்சிக்கு ஏறத்தாழ 16 லட்சம் ஓட்டுக்கள் கிடைச்சிருக்கு. இதையே தனது எதிர்கால வெற்றிக்கான முகாந்திரமா நினைக்கிறார் கமல். அதனால் வரும் சட்டமன்றத் தேர்தலை எப்படியெல்லாம் எதிர்கொள்றதுன்னு, இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசனை செஞ்சிருக்கார். கமலின் அப்ரோச்சில் மகிழ்ச்சியடைஞ்ச பிரசாந்த் கிஷோர், 20 -ந் தேதி சென்னைக்கே வந்து, கமலை அவரோட ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் சந்திச்சி நீண்ட நேரம் உரையாடியிருக்கார். அதில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல் குறித்தும் பேசியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.