Advertisment

கமல்ஹாசன் திறந்து வைக்கும் முதல்வரின் புகைப்பட கண்காட்சி

Kamal Haasan will inaugurate the CM's photo exhibition

Advertisment

முதலமைச்சரின் பிறந்த நாளை ஒட்டி நடக்க இருக்கும் புகைப்படகண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசன் வர சம்மதம் தெரிவித்ததாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி வரும் 28 ஆம் தேதி அன்று சென்னையில் புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை திறந்து வைத்தும் துவக்கி வைப்பதற்காகவும் அமைச்சர் சேகர் பாபு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தார். அழைப்பிதழை வழங்கி புகைப்பட கண்காட்சியை துவக்கி வைக்க அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வில் மேயர் ப்ரியா உடன் இருந்தார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி வரும் 28 ஆம் தேதி பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் அவர் கடந்து வந்த பாதையை விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். அந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை திறந்து வைக்கக் கோரி கேட்டுக்கொள்ள வந்தோம். அவர் வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இன்றைய சினிமாவில் போற்றப்படும் கமல்ஹாசன், முதல்வரின் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருகை தருவது பெருத்த மகிழ்ச்சி” எனக் கூறினார்.

sekarbabu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe