kamal haasan today met party executive for erode east byelection

Advertisment

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். இதனையொட்டி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேபோன்று அதிமுக சார்பாக பழனிசாமி தரப்பும், பன்னீர்செல்வம் தரப்பும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்கமல்ஹாசன்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடலாமா? வேறு ஏதேனும் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது அல்லது தனித்துப் போட்டியிட ஆதரவு கோருவது குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.