kamal haasan

Advertisment

கடந்த 12-ஆம்தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்படும். இதுபற்றிய விரிவான தகவல்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் எனத் தெரிவித்தார். கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு துறைகளுக்கான திட்டங்கள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,

''20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.

Advertisment

ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு''எனக் குறிப்பிட்டுள்ளார்.