வேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு?

நாடாளுமன்ற தேர்தலில் பண புழக்கம் அதிகம் நடைபெற்றதாக கூறி தேர்தல் ஆணையம் வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. நிறுத்தப்பட்ட வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் வேலூர் இடைதேர்தலில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்ய கட்சியும் போட்டியிடவில்லை என்று அறிவித்தனர். தற்போது இந்த இரண்டு கட்சிகளின் வாக்குகள் எந்த கட்சிக்கு கிடைக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுகவில் இருந்து தினகரன் கட்சி பிரிந்ததால் அந்த கட்சி தொண்டர்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிற்கு போகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

ammk

அதே போல் கமல் கட்சிக்கு பெரும்பாலும் புது வாக்காளர்கள் தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தனர். ஆகையால் புதிய வாக்காளர்கள் கமல் கட்சி போட்டியிடாத காரணத்தினால் அவர்களது அடுத்த தேர்வாக சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு செல்லும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே கமல், தினகரன் கட்சிகள் போட்டியிடாததால் அவர்களது வாக்குகள் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு போவதால் திமுகவிற்கு அவர்களது கட்சியின் வாக்குக்குகள் கிடைப்பதில் கொஞ்சம் பின்னடைவு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் வேலூர் தொகுதியில் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் இருபாதகவும் சொல்லப்படுகிறது.

admk ammk byelection MNM Vellore
இதையும் படியுங்கள்
Subscribe