வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் கலாநிதி வீராசாமி பிரச்சாரம் (படங்கள்)

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், சென்னை கிழக்கு மாவட்டம் வடசென்னை நாடாளுமன்றத்தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர்டாக்டர். கலாநிதி வீராசாமியை ஆதரித்துதிரு.வி.க. நகர் தெற்கு பகுதிமற்றும் தோழமைக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் வேட்பாளரை அறிமுகம் செய்து ஆலோசனை வழங்கினர். இதில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு சிறப்புரையாற்றினார்.

north chennai
இதையும் படியுங்கள்
Subscribe