Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 98வது பிறந்தநாளையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக அறிஞர் அண்ணா நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு முன்பு மு. கருணாநிதியின் சிலைக்கு கீழே இருக்கும் உருவப்படத்திற்குதிமுக மூத்த தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகளுடன்மலர் தூவி மரியாதை செய்தார்.

மேலும்அவர், பல பயனுள்ள திட்டங்களைத் துவங்கிவைக்கவும் உள்ளார். அதேபோல் மாவட்டத்திற்கு 1,000 மரக்கன்றுகள் வீதம், அனைத்து மாவட்டங்களிலும் 38 ஆயிரம் மரக்கன்றுகளை நடவுள்ளனர். இந்த நிகழ்வின்போது அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஐ. பெரியசாமி, அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.