கலைஞரின் புகைப்படத்தை இரவு முழுவதும் கட்டி அணைத்தப்படியே உறங்கிய தொண்டர்கள்

திமுக தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, அக்கட்சியின் தொண்டர்கள் இரவு பகலாக அங்கேயே கூடியுள்ளனர். வெளியூர்களில் இருந்து வந்த தொண்டர்கள் விடிய விடிய மருத்துவமனை முன் காத்து இருக்கிறார்கள். காலை 6 மணியளவில் ஆஸ்பத்திரியில் இருந்து தலைவர்கள் வீடுகளுக்கு சென்ற பின்புதான் அங்கிருந்து கலைந்து செல்கிறார்கள். நேற்று இரவு சில தொண்டர்கள் இடம் கிடைத்த இடத்தில் தூங்கினர். அப்போது தாங்கள் கையில் வைத்திருந்த தலைவரின் புகைப்படத்தை கட்டி அணைத்து உறங்கினர்.

5-வது நாளான இன்று கூடி இருந்த தொண்டர்கள் கலைஞர் நலம் பெறுவதற்காக கோ‌ஷம் எழுப்பினார்கள். ‘‘சரித்திரமே ஓடிவா...சமத்துவமே ஓடிவா..., எங்கள் தலைவா ஓடிவா..., பகுத்தறிவே ஓடிவா..., திராவிடமே ஓடிவா..., எங்களை காக்க ஓடிவா..., காவேரியை விட்டு ஓடிவா... அறிவாலயத்தை நாடிவா..., என கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர்.

kalaignar photo
இதையும் படியுங்கள்
Subscribe